போலீசாரை மிரட்டிய 4 பேர் கைது
போலீசாரை மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு துரைபாண்டியன் (வயது 51), செல்வம் (38), செந்தில்குமார் (65), இசக்கி ராஜா (49) ஆகிய 4 பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க சென்ற போலீசாரையும் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரைபாண்டியன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.