3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல்

பள்ளிப்பட்டு கிராம ஊராட்சி 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல்

Update: 2022-07-09 16:52 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்பட்டு கிராம ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளதால் அதற்கு நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 6 போ் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 3-வது வார்டு பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர். மொத்தமுள்ள 277 வாக்குகளில் 193 வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்ததும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி தலைமையில் வாக்குப்பெட்டியை அதிகாரிகள் சீல் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்று ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்தனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்