3-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

குத்தாலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவரின் 3-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

Update: 2023-09-02 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், குத்தாலம் அ.தி.மு.க. முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளரும், தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவருமான அரையபுரம் என்.தமிழரசனின் 3-ம் ஆண்டு நினைவு நாள் அரையபுரம் மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பூம்புகார் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டு தமிழரசனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் ஏழை, எளிய மகளிருக்கு புடவை உள்ளிட்ட நல உதவிகளையும் வழங்கினார்.இதே போல குத்தாலம் முதியோர் இல்லத்தில் மதிய உணவும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரவர்மன், இளங்கோவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ராஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் முருகன், செழியன், வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜோதி ஹரிகிருஷ்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மணி சுந்தர், குத்தாலம் பேரூர் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜெயபாலகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய மாணவரணி தலைவர் வெடிதுரை, உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராமதிலகம் தமிழரசன் குடும்பத்தினர்கள் மற்றும் கோனேரிராஜபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரபோஸ்வர்மா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்