3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பள்ளிகொண்டாவில் 3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார், இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் பள்ளிகொண்டா பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோதி என்பவர் வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 3,500 கிலோ ரேஷன் அரிசி வெளி மாநிலத்திற்கு அனுப்புவதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து குடியாத்தம் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.