கோபியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.34 லட்சம் கையாடல்- அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு

கோபியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.34 லட்சம் கையாடல் செய்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-26 21:39 GMT

கோபியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.34 லட்சம் கையாடல் செய்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.34 லட்சம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கந்தராஜா கடந்த 15-ந் தேதி ஈரோடு மாவட்ட வணிக குற்றபுலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

கோபியில் ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி வரை நடந்த வரவு- செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது ரூ.34 லட்சத்து 16 ஆயிரத்து 295 கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தனர்.

7 பேர் மீது வழக்கு

இதுகுறித்து வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்மாபேட்டையை சேர்ந்த சங்கத்தின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான ஈஸ்வரமூர்த்தி (வயது 48), ஊமாரெட்டியூர் கள்ளிகாட்டை சேர்ந்த சங்கத்தின் முன்னாள் துணை தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான பாலசுப்பிரமணியம் (46), கோபி குள்ளம்பாளையம் ஆண்டாள் நகரை சேர்ந்த சங்க செயலாளரான மோகன் (52), நெரிஞ்சிபேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த துணை செயலாளரான ராஜகோபால் (56), அதேபகுதியை சேர்ந்த சங்க எழுத்தாளர்களான சிவக்குமார் (46), வரதராசு (44), அந்தியூர் ஜரத்தலை சேர்ந்த காசாளர் சோமசுந்தரம் (59) ஆகியோர் ரூ.34 லட்சத்து 16 ஆயிரத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேர் மீதும் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சோமசுந்தரம் இறந்து விட்டார். மற்ற 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்