அரசு பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு திடீர் அலர்ஜி

ஆம்பூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு திடீர் அலர்ஜி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

Update: 2023-08-24 18:14 GMT

திடீர் அலர்ஜி

ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பள்ளியில் திடீரென 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் மற்றும் கைப்பகுதியில் அலர்ஜி ஏற்பட்டது.

இதனை அறிந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை மின்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் பார்வையிட்டார்

அவர்களில் 8 மாணவர்களை மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் சென்று மாணவர்களை பார்வையிட்டு, டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் தற்போது ஏற்படவில்லை. அனைவரும் நல்ல நிலையில் உள்ளார்கள் என கலெக்டர் தெரிவித்தார்.

மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்