கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 32,740 கனஅடி நிர் திறப்பு
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 32 ஆயிரத்து 740 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அரியலூர்,
காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீரானது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழணையில் வந்தடைந்தது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 32 ஆயிரத்து 740 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.