மது விற்ற 32 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-25 19:30 GMT

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன்சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து கடந்த 19-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 239 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்