301 மாணவிகள் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 301 மாணவிகள் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-02-26 15:58 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் 301 பரத நாட்டிய மாணவிகள் பங்கேற்ற சைவ சமய குரவர்கள் நால்வர் பொற்றாள் பணிவோம் என்ற தலைப்பில் நால்வரின் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்) சைவ திருமுறைகளின் கருத்தாக்கத்தை 27 நிமிடங்களில் பரத நாட்டிய அசைவுகள் மூலம் வெளிப்படுத்தி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கர நாட்டிய வித்யாலயா சார்பில் நடந்தது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தொடங்கி வைத்தார்.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பரத நாட்டிய மாணவிகள் பங்கேற்று 3 சைவ திருமுறைகள் பாடல்களுக்கு நாட்டியம் ஆடினர். உலக சாதனைக்காக சைவ திருமுறைகளை நாட்டிய அசைவுகள் மூலம் வெளிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கான ஏற்பாடுகளை சங்கீதா சிவகுமார், சிவக்குமார், குமரகுருபரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதில் ராபா உலக சாதனை புத்தகத்தின் சார்பாக பதிவு செய்யப்பட்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று பரத நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் நேரில் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்