300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
அரக்கோணம் அருகே ஏரிப்பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் கிராமத்தில் உள்ள ஏரி கலங்கல் பகுதியில் பாறைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பாலம் கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்ட போது அங்கு சுமார் 2 கல்வெட்டுகள் இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து அரக்கோணம் வருவாய்த் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அலுவலர்கள் கல்வெட்டை பார்வையிட்டனர். அப்போது அந்த கல்வெட்டு 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் ென்று தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.