ரெயிலில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர் வெங்கடேசன் ஆகியோர் அரக்கோணம் ரெயில் நிலைய நடைமேடை மற்றும் இவ்வழியாக செல்லும் ரெயில் பெட்டிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த போது போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை செய்தனர்.
அப்போது பெட்டியில் 15 பைகளில் சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.