15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 லட்சம் கடன்

கோட்டூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 லட்சம் கடனை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-02-03 18:45 GMT

கோட்டூர்:

கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 15 மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு ரூ.30 லட்சம் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம்.சிவசண்முகம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் (பொறுப்பு) எஸ்.மணிமாறன் வரவேற்றார். மாரிமுத்து எம்.எல்.ஏ., கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடன் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மிக சாதாரண ஏழை, எளிய மக்கள் கந்துவட்டி கொடுமையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, மகளிர் சுய உதவிக்குழுவை அமைத்து அரசு மூலம் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயனடைந்துள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதலாக கடன் வழங்கும் திட்டதை செயல்படுத்தி வருகிறார். கடன் தொகையை ஆடு.மாடு போன்ற கால்நடைகளை வளர்க்கவும், நெல் சாகுபடி செய்வதற்கும் சிறு,குறு தொழில்கள் தொடங்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, கள மேலாளர் வீரசேகரன், உதவி கள மேற்பார்வையாளர் முத்துக்குமார், எழுத்தர் எஸ்.சித்ரா, அலுவலக பணியாளர்கள் வேம்பையன், சி.கலையரசன், சதீஷ், பாண்டியன், ராஜசேகரன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதுநிலை எழுத்தர் சத்ய நாராயணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்