அழுகிய 30 மூட்டை வெங்காயம், பூண்டு பறிமுதல்
அழுகிய 30 மூட்டை வெங்காயம், பூண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி காந்திமார்க்கெட் சப்-ஜெயில்ரோடு பகுதியில் உள்ள வெங்காய கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்தினார்கள். இதில் 2 கடைகளில் சுமார் 30 மூட்டைகள் அழுகிப்போன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை சிறு உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்துஅதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்து அழித்தனர். இதுபோன்ற கெட்டுப்போன உணவு பொருட்களை சிறு உணவகங்களுக்கு விற்பனை செய்யவோ, வாங்கவோ கூடாது. தரமான உணவு பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.