30 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
30 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று விருதுநகர்-மதுரை ரோட்டில் சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 50 கிலோ எடை கொண்ட 30 மூடைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வேன் மற்றும் அரிசி உரிமையாளர் மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த மலை மன்னன் (வயது 38), சுமை தூக்கும் தொழிலாளிகள் கண்ணன் (22), மதுரை ராஜீவ் காந்தி குறுக்கு தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.