கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் பஸ் நிலையம், பஸ் நிறுத்தம், ஆர்.எஸ்.ரோடு டாஸ்மாக் கடை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டு ஓட்டம் பிடித்த 3 ேபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பிடிபட்ட 3 பேரையும் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சிங்கராம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்(வயது 19), சிக்கலாம்பாளையத்தை சேர்ந்த பூபதி(19), சூரியா(19) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து இருந்து தலா 100 கிராம் வீதம் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களை போலீசார் கைது செய்தனர்.