கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
காட்பாடியில் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காட்பாடி ராமதாஸ் நகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலவெங்கட்ராமன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3-வது தெருவில் கஞ்சா வைத்திருந்த முகமது ரபீக், ஜெகதீசன், மணிகண்டன் ஆகிேயாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.