தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-02-17 20:28 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிவகாசி பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது30). தொழிலாளியான இவர் பள்ளி மாணவியிடம் தகராறு செய்து உள்ளார். இது தொடர்பாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமனறத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து அழகர்சாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்