சாராயம் விற்ற 3 பெண்கள் கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-02 16:44 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் கீழ்வேளூர் அருகே ராதாமங்கலம் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், நாகை, வெளிப்பாளையம் பப்ளிக் ஆபிஸ் ரோட்டை சேர்ந்த குணசேகரன் மனைவி சுந்தரம்பாள் (வயது 62) என்பதும், அவர் அந்த பகுதியில்‌ சாராயம் விற்றதும் தெரியவந்தது.

3 பெண்கள் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரம்பாளை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல ராதாமங்கலம் நடுத்தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கொல்லகாட்டு‌ குமார் மனைவி பூங்கொடி (45), சிக்கவலம் மேல்பாதி பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சுகுமார் மனைவி சுசீலாதேவி (29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்