மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

Update: 2023-05-23 19:30 GMT

ஓசூர்:-

ஓசூர் டவுன் போலீசார் ஒன்னல்வாடி - தொரப்பள்ளி சாலையில் ஜொனபண்டா அருகில் ரோந்து சென்றனர். அப்போது, 3 டிப்பர் லாரிகளில், 11 யூனிட் மண் ஏற்றப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த மண் அனுமதியின்றி கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார், லாரிகளையும், மண்ணையும் பறிமுதல் செய்தனர். இதேபோல தளி கொத்தனூர் அருகே ராட்சத கற்களை அனுமதியின்றி கொண்டு சென்ற லாரியும், கற்களை ஏற்ற பயன்படுத்தும் வாகனமும் பறிமுதல் செய்யப்ட்டது.

மேலும் செய்திகள்