3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை

ஆரணி அருகே ஜெயின் கோவிலில் 7 பஞ்சலோக சிலைகளை திருடி சென்றவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்தார்.

Update: 2023-07-23 17:06 GMT

ஆரணி

ஆரணி அருகே ஜெயின் கோவிலில் 7 பஞ்சலோக சிலைகளை திருடி சென்றவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்தார்.

பஞ்சலோக சிலைகள் திருட்டு

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட பூண்டி கிராமத்தில் பொன்னெழில் நாதர் ஜெயின் கோவில் உள்ளது. தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலாகும்.

நேற்று  காலை கோவிலை திறக்க வந்தபோது கருவறை கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கருவறையில் இருந்த 7 பஞ்சலோக சாமி சிலைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ேமாப்பநாய் தங்களை கண்டுபிடிக்காமல் இருக்க கோவில் முழுவதும் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவிவிட்டு சென்றுள்ளனர்.

3 தனிப்படைகள் அமைப்பு

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் கோவிலுக்கு வந்து திருட்டு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.

மேலும் பஞ்சலோக சாமி சிலைகளை திருடி சென்றவர்களை கண்டுபிடிக்க ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்