3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

Update: 2022-09-08 13:06 GMT

காங்கயம்

காங்கயம் அருகே 3 கடைகளில் பூட்டை உடைத்து ரூ..67 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடைகளில் திருட்டு

காங்கயம் நெய்க்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகார்த்திகேயன். நெய்க்காரன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்றுகாலை கடைக்கு வந்து திறந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஷட்டரை திறந்து கடைக்குள் சென்று பார்த்தபோது டிராவில் வைக்கப்பட்டிருந்த ரூ.45 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் நெய்க்காரன்பாளையத்தை அடுத்துள்ள புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரமும், புதூர் பிரிவு அடுத்துள்ள ஆலாம்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் சதீஸ்குமார் என்பவரது இருசக்கர வாகன ஒர்க் ஷாப்பில் பூட்டை உடைத்து கடையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்மஆசாமிகள் திருடிச்சென்றனர். இதையடுத்து கடை உரிமையாளர்கள் காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்