வீட்டில் 3½ பவுன் நகைகள் திருட்டு

வேப்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2023-06-12 18:45 GMT

ராமநத்தம்

கள்ளக்குறிச்சிக்கு சென்றார்

வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடியை சேர்ந்த குணசேகரன் மனைவி தனலட்சுமி(33). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தனலட்சுமி நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு அறுபட்ட நிலையில் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நகைகள் திருட்டு

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த இருந்த தோடு, மோதிரம், தங்க காசு உள்பட 3½ பவுன் நகைகள் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு, கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து தனலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 3½ பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் ஐவதுகுடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்