ஆட்டோவில் தவற விட்ட 3 பவுன் நகை பெண்ணிடம் ஒப்படைப்பு
ஆட்டோவில் தவற விட்ட 3 பவுன் நகை பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா பாடந்துறை பகுதியை சேர்ந்த ஷாதினா என்பவர் ஆட்டோவில் கூடலூருக்கு வந்தார். அவர் வரும் வழியில் தனது கைப்பையை தவற விட்டு விட்டார். அதில் 3 பவுன் தங்க நகை இருந்தது. உடனடியாக தனது பையை கண்டுபிடித்து தருமாறு கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளிடம் தெரிவித்தார். தொடர்ந்து குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகீம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் பெரிய சூண்டி பகுதியில் சென்று கொண்டு இருந்த ஆட்டோவை நிறுத்தி அதன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆட்டோவில் இருந்து தவற விட்ட 3 பவுன் நகையை பத்திரமாக மீட்டு ஷாதினாவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பெண், போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.