பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு

பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு போனது.

Update: 2022-11-03 22:13 GMT

திருச்சி மலைக்கோட்டை அரசமரத்தெருவை சேர்ந்தவர் லதாகுமார்(வயது 27). இவர் மணப்பாறையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், ஊருக்கு செல்வதற்காக மணப்பாறை பஸ் நிலையம் சென்றார். அங்கு பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த சங்கிலியை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றிருக்கலாம் என்று தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்