சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாநகரில் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.