குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் சீரான மும்முனை மின்சாரம் உரிய நேரத்தில் வழங்கப்படாததால் விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் சீரான மும்முனை மின்சாரம் உரிய நேரத்தில் வழங்கப்படாததால் விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

Update: 2023-03-28 12:08 GMT

போடிப்பட்டி

குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் சீரான மும்முனை மின்சாரம் உரிய நேரத்தில் வழங்கப்படாததால் விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

நிலத்தடி நீர்

குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசன தேவைக்காக பெரும்பாலும் நிலத்தடி நீராதாரங்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மின் மோட்டார்கள் மூலம் நீர் இறைத்து பாசனம் செய்து பயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆனால் குடிமங்கலத்தில் பல கிராமங்களில் மின் மோட்டார்களை இயக்கத் தேவையான மும்முனை மின்சாரம் உரிய நேரத்தில் கிடைக்காததால் விவசாயிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

நீர் இழப்பு

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி செயலாளர் ஸ்ரீதர் உடுமலை ஆர்.டி.ஓ.வுக்கு மனு அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

குடிமங்கலம் பகுதி கிராமங்களில் மும்முனை மின்சாரம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. முழுமையாக மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டால் விவசாயிகள் தங்களுக்கு சாதகமான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ள முடியும். ஆலாமரத்தூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தற்போது காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள இந்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் அதிக அளவில் நீர் இழப்பும் ஏற்படுகிறது.

பாசன நீர் பற்றாக்குறை உள்ள நிலையில் நீர் இழப்பு பயிர் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கடந்த காலங்களைப் போல காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்