மதுபானம் விற்ற 3 பேர் சிக்கினர்

வருசநாடு பகுதியில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-01 18:45 GMT

வருசநாடு,

வருசநாடு போலீசார் நேற்று சிங்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் வைகை ஆற்றுப்பாலம் அருகே மதுபானம் விற்ற தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த மலைப்பாண்டி (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடமலைக்குண்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தங்கம்மாள்புரம் சுடுகாடு அருகே மதுபானம் விற்ற, அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) என்பவரை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்துனர்.

இவர்கள் 2 பேரிடம் இருந்து 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், போடி நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி-தேவாரம் சாலையில் உள்ள கூட்டுறவு பால் பண்ணை அருகே மதுபானம் விற்ற, போடி தேவர் காலனியை சேர்ந்த சுதாகர் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்