நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு பணியில் இல்லாத 3 பேர் பணியிடை நீக்கம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-07-05 12:26 GMT

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கலெக்டர் திடீர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பேரூராட்சி பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்கள் புகார் தெரிவித்த 3 ஊழியர்கள் குறித்து கேட்டபோது அவர்கள் 3 பேரும் பணியில் இல்லாதது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பணியில் இல்லாத 3 பேரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

3 பேர் பணியிடை நீக்கம்

கலெக்டர் உத்தரவை தொடர்ந்து வரி தண்டலர் வே.கம்சலா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காவலர் ஜெயபால் மற்றும் அலுவலக உதவியாளர் சி.அனுமந்தன் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஆய்வின் போது பேரூராட்சி உதவி இயக்குனர் ஜீஜபாய், நாட்டறம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா சூரிய குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்