போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-02 19:08 GMT

மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் மது விற்பனையை தடுக்க மாநகர பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுவிற்ற நாங்குநேரியை சோந்த கல்லத்தியான் (வயது 50), பாப்பாக்குடியை சேர்ந்த கண்ணன் (54), சீவலப்பேரியை சேர்ந்த கண்ணன் (43), கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த நாராயணன் (44), தாழையூத்தை சேர்ந்த அங்கப்பன் என்ற செல்வம் (29), பாளையங்கோட்டையை சேர்ந்த குலசேகரன் (38), பெருமாள்புரத்தை சேர்ந்த ராகுல் (24), மேல திருவேங்கடநாதபுரத்தை சோந்த தங்கபெருமாள் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 177 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

அதே நேரத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கச்சென்ற போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்த தச்சநல்லூரை சேர்ந்த கலைச்சங்கர் (22), கருங்குளத்தை சேர்ந்த ஈசுவரன் (25), தாழையூத்தை சேர்ந்த சிவக்குமார் (38) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 570 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே போல் நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து, கங்கைகொண்டான், முன்னீர்பள்ளம் பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற பண்டாரக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் (35), அணைத்தலையூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (63), தருவையை சேர்ந்த சண்முகவேல் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்