வீடு புகுந்து பீரோ, துணிகளை தீ வைத்து சேதப்படுத்திய 3 பேர் கைது

விழுப்புரத்தில் வீடு புகுந்து பீரோ, துணிகளை தீ வைத்து சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-23 18:31 GMT

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி சத்யா (வயது 47). இவர்களது மகன் சஞ்சீவ்குமார் (22). இவர் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த சுமன்ராஜின்(23) தங்கை சுரேகாவை (21) திருமணம் செய்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சஞ்சீவ்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் சுமன்ராஜ் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சீவ்குமார், சுமன்ராஜை திட்டி தாக்கினார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுமன்ராஜ், சந்தோஷ் (25), கோபிநாத் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து சஞ்சீவ்குமாரின் ஓட்டு வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த இரும்பு பீரோ மற்றும் துணிகளை தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சத்யா, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்