அரக்கோணம் அருகே பாம்பின் தலையை கடித்து துப்பிய 3 பேர் கைது

சமூக வலைதளங்களில் பரவ வேண்டும் என்பதற்காக பாம்பின் தலையை கடித்து துப்பிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2023-04-05 10:02 GMT

சென்னை,

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சின்ன கைனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன், 30, சூர்யா, 21, சந்தோஷ், 20. விவசாய கூலி தொழிலாளர்கள். இவர்கள் மூன்று பேரும் நேற்று (ஏப்.,4)ல் காலை 8:00 மணிக்கு சின்ன கைனுார் ஏரிக்கரையோரம் சுற்றிக்கொண்டிந்த தண்ணிப்பாம்பை பிடித்தனர். பின் அதை மூவரும் கைகளால் ஒன்றாக பிடித்து வாயால் கடித்து கொன்று துப்பினர். இந்த காட்சி வீடியோவாக சமூக வளைதலங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக ஆற்காடு வனச்சரக அலவலர் சரவணபாபு விசாரணை நடத்தி மூவரையும் இன்று கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தார்.

கைதான மூவரும் பல விதமான பாம்புகளை கொன்று அதன் தோலை விற்பனை செய்து வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தாங்கள் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவ வேண்டும் என்பதற்காக பாம்பை கடித்து துன்புறுத்தியதாக அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்