கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

சின்னவேடம்பட்டியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-25 17:10 GMT

கணபதி

கோவை கணபதியை அடுத்துள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள், சாய்பாபா காலனியை சேர்ந்த அஜித் (வயது 25), ஷர்மிளா பேகம் (41) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல கணபதி-சங்கனூர் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் உடையாம்பாளையத்தை சேர்ந்த சிவா என்ற சிவபிரசாத் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்