டேங்கர் லாரியிலிருந்து கருப்பு ஆயிலை திருடிய டிரைவர், கிளீனர் உள்பட 3 பேர் கைது

வாலாஜா அருகே என்ஜினுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை பதுக்கி விற்பதற்காக டேங்கர் லாரியிலிருந்து அதனை திருடி குடோனுக்கு எடுத்துச்சென்ற அதே லாரியின் டிரைவர், கிளீனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-04 17:31 GMT

வாலாஜா அருகே என்ஜினுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை பதுக்கி விற்பதற்காக டேங்கர் லாரியிலிருந்து அதனை திருடி குடோனுக்கு எடுத்துச்சென்ற அதே லாரியின் டிரைவர், கிளீனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசருக்கு ரகசிய தகவல்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் சென்னசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் என்ஜின்களுக்கு பயன்படுத்தப்படும் கருப்பு ஆயிலை சிலர் பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பதாக வேலூர் மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்- இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், செல்வராஜ், ஏட்டுக்கள் சந்திரன், அருள், வெங்கடேசன் ஆகியோர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 டேங்கர் லாரிகளில் இருந்து கருப்பு ஆயில் இறக்கப்பட்டு குடோனுக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சுடலைமணி, தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த விஜயகுமார், சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ராஜலிங்கம் என்பது தெரியவந்தது. சுடலைமணிக்கு சென்னசமுத்திரம் பகுதியில் குடோன் உள்ளது.

குடோனில் ஆயில் பதுக்கல்

விஜயகுமார் டேங்கர் லாரியில் டிரைவராகவும், ராஜலிங்கம் கிளீனராகவும் வந்தவர்களாவர். அந்த லாரியை சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் விட்டிருந்தார்.

சென்ன சமுத்திரம் பகுதியில் சுடலை மணிக்கு சொந்தமான குடோன் உள்ளது. ராஜேசின் டேங்கர் லாரியை டிரைவர் விஜயகுமார் வாலாஜா வழியாக ஓட்டி வந்தபோது அவரும் கிளீனர் ராஜலிங்கமும் சேர்ந்து அவ்வப்போது 100, 200 லிட்டர் வீதம் திருடி சுடலைமணியின் குடோனில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் டேங்கர் லாரிகளில் இருந்த 37 ஆயிரத்து 500 லிட்டர் கருப்பு ஆயிலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்