புகையிலை பொருட்கள் விற்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-06 21:09 GMT

அரியமங்கலம்:

3 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரியின் பின்புறம் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரியமங்கலம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பூமிநாதன் (வயது 40), அவரது தம்பி ஆறுமுகம் (36) மற்றும் அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த அன்புரோஸ் (54) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

மேலும் அவர்களிடம் இருந்த 23½ கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.1,040 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்