பெட்டிக்கடைக்காரர் உள்பட 3 பேர் கைது
பெட்டிக்கடைக்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி நகர், அடிவாரம் பகுதியில் பழனி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இட்டேரி ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் அதே சாலை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக அடிவாரம் பகுதியை சேர்ந்த கோகுல் (22), சூர்யா (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரிடம் இருந்தும் 4 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.