சாராயம், மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
மணல்மேடு பகுதியில் சாராயம், மது விற்ற பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
மணல்மேடு:
மணல்மேடு பகுதியில் சாராயம், மது விற்ற பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
ரோந்து பணி
மணல்மேடு பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மங்களநாதன், பிரேம்குமார் மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மணல்மேடு அருகே உள்ள கொற்கை சாலை தெருவில் விஜயகுமார் மனைவி சங்கீதா (வயது 33) என்பவரது வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை கைது செய்தனர்.
கைது
இதேபோல் மணல்மேடு அருகே ராதா நல்லூர் மெயின் ரோடு பகுதியில் மது விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், அதே பகுதியை சேர்ந்த பாட்டையன் மகன் மகேஷ் (35) என்பதும், இவரது வீட்டின் பின்புறம் விற்பனைக்காக 4 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மகேஷைக் கைது செய்தனர்.
மணல்மேடு அருகே உள்ள காளி பகுதியில் சாராயம் விற்ற பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாரூக் (70) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.