முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்

கடையம் பகுதியில் முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-02-02 18:45 GMT

கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மத்தளம்பாறை பீட் வெளிமண்டல பகுதியான உப்பனாங்குளம் அருகில் சிலர் முயல் வேட்டையாட முயன்றதாக கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனவர் முருகேசன், வனக்காப்பாளர் ஆறுமுகநயினார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது முயல் வேட்டையாட முயன்றதாக, மத்தளம்பாறை சில்லரைபுரவு கிராமத்தை சேர்ந்த குத்தாலிங்கம் மகன் கைலாசம், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துராஜ், குணராமநல்லூரை சேர்ந்த முருகன் மகன் ஆண்ட்ரோஸ் ஆகிய 3 பேரையும் பிடித்தனர். இதையடுத்து அம்பை துணை கோட்ட இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில், அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்