கட்டிட தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
நெல்லை அருகே கட்டிட தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேட்டை:
சங்கரன்கோவில் வாழவந்தான்புரம் மேல தெருவைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் முனீஸ்வரன் (வயது 24). கட்டிட தொழிலாளியான இவர் நெல்லை அருகே சுத்தமல்லியில் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நெல்லை தருவை கீழத்தெருவை சேர்ந்த ஆனைக்குட்டி மகன் உய்காட்டான் (21), சுத்தமல்லி விலக்கு வ.உ.சி. நகர் 3-வது தெருவை சேர்ந்த குமார் மகன் பாஞ்சாலராஜா (26), அதே பகுதி 1-வது தெருவை சேர்ந்த முகமது மைதீன் மகன் தீன்முகமது (23) ஆகிய 3 பேரும் முனீசுவரனிடம் மது குடிக்க பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து உய்காட்டான் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.