மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-26 18:45 GMT

பிரம்மதேசம், 

திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. இவர் தனது மோட்டார் சைக்கிளை நல்லாளம் கூட்டு ரோட்டில் நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது பெருமுக்கல் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் (வயது 34), ராமமூர்த்தி (34), பாலாஜி (23) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் இவர்கள் பிரம்மதேசம் பகுதியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பாலசுந்தரம் உள்பட3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்