மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது
போக்குவரத்து கழக பணிமனையில் மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வால்பாறை
வால்பாறை பழைய பஸ் நிலையம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. சம்பவத்தன்று அங்கிருந்த மின் மோட்டார் திருட்டு போனது. இதுகுறித்து போக்குவரத்து கழக காவலாளி வேல்முருகன் (வயது 52) என்பவர் வால்பாறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனாதன் விசாரணை நடத்தினார். இதில் வால்பாறை கலைஞர் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் (33), செல்வக்குமார் (35), காந்தி (29) ஆகிய 3 பேர் மின் மோட்டார் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.