கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு பகுதியில் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காளீஸ்வரன் (வயது 24), கணேஷ் குமார் (29), கார்த்தி (21) என்பதும் விற்பனைக்காக 140 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. இதை பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.