மளிகை கடையை சூறையாடிய 3 பேர் கைது

செந்துறை அருகே மளிகை கடையை சூறையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-27 19:25 GMT

மளிகை கடை சூறை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 33). இவர்கள் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த நீதிபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் நீதிபதி மற்றும் அவரது உறவினர்களான விஜயன், சூர்யா, வேல்முருகன், இளையராஜா ஆகியோர் சேர்ந்து செல்வராஜ் கடையில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் கடையில் இருந்த ரூ.23 ஆயிரத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.

3 பேர் கைது

இதைத்தடுக்க முயன்ற முத்துலட்சுமி மற்றும் அவரது மாமியார், மகன் ரோகித் ஆகியோரையும் தாக்கியதாக தெரிகிறது. மேலும் இவைகள் அனைத்தும் அவர்கள் வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடையை சூறையாடிய நீதிபதி, விஜயன், சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்