பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது

பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது

Update: 2023-05-27 15:48 GMT

விழுப்புரம்

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை, நகராட்சி திடல் ஆகிய இடங்களில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, பாலசிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொது இடத்தில் அமர்ந்துகொண்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது குடித்துக்கொண்டிருந்ததாக விழுப்புரம் அருகே பஞ்சமாதேவியை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 30), கண்டாச்சிபுரம் அருகே சென்னகுணத்தை சேர்ந்த சக்திவேல் (32), ஞானசேகர் (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்