ஆயுதங்களுடன் 3 பேர் கைது

ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-14 19:00 GMT

பட்டுக்கோட்டை நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாக்கியம் நகர் சிவன் கோவில் குளம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்த ஆதங்க தேவர் மகன் தங்கபாண்டி (வயது27), வாண்டையார்புரம் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் மகன் கார்த்தி (29), பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த மோசஸ் மகன் சுந்தர்ராஜ் (22) என்றும் அவர்கள் வாள்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததும் அவர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசாா் அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்