ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்
கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் மோதியது
கும்பகோணம் அருகே சாக்கோட்டை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 39). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கணினி உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயபாரதி (34). இவர்களுடைய மகள் ்லயா(5).
இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் தனது மனைவி ஜெயபாரதி, மகள் லயா ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
3 பேர் படுகாயம்
இதில் கார்த்திகேயன், ஜெயபாரதி, குழந்தை லயா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் சிகிச்சைக்காக மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.