தட்டார்மடம் அருகே 3 வீடுகள் தீயில் எரிந்து நாசம்

தட்டார்மடம் அருகே 3 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின

Update: 2023-09-17 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகேயுள்ள இடைச்சிவிளை மோடி நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் அப்பகுதி மக்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரெனிஸ்குமார் மனைவி பட்டுமுத்து என்பவரது குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ, அருகில் உள்ள மற்ற 2 வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் முருகன் மனைவி லலிதா (53), செல்வம் மனைவி மகேஸ்வரி (28) உள்பட 3பேரின் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து குறித்து அரசூர்-1 கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்