3 வீடுகள் இடிந்து விழுந்தன

கோத்தகிரியில் தொடர் மழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

Update: 2022-11-14 20:15 GMT

கோத்தகிரி, 

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று கோத்தகிரி அருகே ஓம்நகரை சேர்ந்த சுந்தரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. கோழித்தொரை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த லட்சுமி மற்றும் தருமன் ஆகியோரது வீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையான தலா ரூ.4,100 வழங்கப்பட்டது. கோத்தகிரி பகுதியில் நேற்று மழை பெய்யவில்லை. காலை முதல் லேசான வெயில் மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் தொழிலாளர்கள் வழக்கம்போல பணிக்கு சென்றதையும், பள்ளி குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்றதையும் காண முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்