குட்கா வைத்திருந்த 3 கடைகளுக்கு சீல்

பள்ளிகொண்டா அருகே குட்கா வைத்திருந்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-12-22 17:23 GMT

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 16 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் உள்ள 30 கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மூன்று கடைகளில் ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து 20 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து கந்தனேரி வேளாளர் தெருவை சேர்ந்த விநாயகம் (வயது 58), நெடுஞ்செழியன் (54), சின்ன கோவிந்தம்பாடி பகுதியை சேர்ந்த வில்வநாதன் என்பவரது மனைவி சுஜாதா (35) ஆகியோரின் கடைகளுக்கு பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, யுவராஜ், சீனிவாசன், மற்றும் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்