தடுப்பனையில் மூழ்கி பள்ளி மாணவி உள்பட 3 பெண்கள் பலி

தக்கோலம் அருகே தடுப்பணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவி உள்பட 3 பெண்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

Update: 2022-09-04 16:25 GMT

தக்கோலம் அருகே தடுப்பணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவி உள்பட 3 பெண்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

குளிக்க சென்றனர்

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் ஜெய் ஹூல் ஹக். இவர் சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது உறவினரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதற்கான விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்காக தக்கோலத்தில் உள்ள ஜெய் ஹூல் ஹக் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். நேற்று மாலை 4.30 மணி அளவில் ஜெய் ஹூல் ஹக் மற்றும் உறவினர்கள் சிலருடன் அந்தப் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

தண்ணீரில் மூழ்கி 3 பேர் பலி

தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த போது 9-ஆம் வகுப்பு படித்து வரும் ஜெய் ஹூல் ஹக்கின் மகள் பவுசியா (வயது 13), உறவினர்களான ஸ்ரீபெரும்பதூர் பகுதியை சேர்ந்த தாஜிஸ்கான் மகள் பரிதாபானு (21), சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த ஜாபர் மனைவி ரசூல் (23) ஆகிய 3 பேரும் திடீரென அணையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளனர்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள், அவர்கள் 3 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்