3 துணைதாசில்தார்- 8 வருவாய் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வுடன் இடமாறுதல்
தஞ்சை மாவட்டத்தில் 8 வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் 3 துணை தாசில்தார்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் 8 வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் 3 துணை தாசில்தார்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வருவாய் ஆய்வாளர்கள்
தஞ்சை மாவட்டத்தில் 8 வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் 3 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு அளித்து இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பிறப்பித்துள்ளார். அதன்படி பதவி உயர்வு பெற்று இடமாறுதல் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரபு, திருவிடைமருதூர் வட்ட அலுவலக துணை தாசில்தாராக (தேர்தல்), திருவையாறு வட்ட குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் தர்ஷனா திருவையாறு வட்ட அலுவலக துணை தாசில்தாராக (தேர்தல்), ஒரத்ததாடு வட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பரிமளா, பேராவூரணி வட்ட அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்- திருவிடைமருதூர்
கும்பகோணம் கோட்ட கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிகண்ணம்மா, கும்பகோணம் வட்ட அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தஞ்சை கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் அம்மு, திருவையாறு வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், கும்பகோணம் வட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் கிருபாராணி, திருவிடைமருதூர் வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ், திருவிடைமருதூர் வட்ட அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் தமிழரசி, தஞ்சை வருவாய் கோட்ட அலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக உ பிரிவு தலைமை உதவியாளர் அருள்மணி, திருவிடைமருதூர் தேசிய நெடுஞ்சாலை அலகு தனி தாசில்தாராகவும், பட்டுக்கோட்டை வட்ட அலுவலக துணை தாசில்தார் (தேர்தல்) தெய்வானை, பட்டுக்கோட்டை நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராகவும் (புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள பணியிடம்), திருவையாறு வட்ட அலுவலக துணை தாசில்தார் சுந்தரசெல்வி, ஒரத்தநாடு தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.